காத்தான்குடி மத்திய கல்லூரி இல்ல விளையாட்டு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு உட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி இல்ல விளையாட்டை முன்னிட்டு மாணவர்களின் மரதன் ஓட்டம் நடைபெற்றுள்ளது.

பாடசாலையின் அதிபர் எச்.எஸ்.பிர்தௌஸ், இன்று மரதன் ஓட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார்.

பாடசாலை இல்ல விளையாட்டை முன்னிட்டு மாணவர்களின் மரதன் ஓட்டம் பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகி காத்தான்குடி கடற்கரை வீதி, பிரதான வீதி, மீரா பள்ளி வீதி, டெலிகொம் வீதி, அந்நாசர் வித்தியாலய வீதி, பழைய கல்முனை வீதி, பிரதான வீதி, ஜாமி உல்லா பிரின் வீதி, காத்தான்குடி கடற்கரை வீதி வழியாக பாடசாலையை வந்தடைந்தது.

இவ் மரதன் ஓட்டத்தில் முதலாம் இடத்தினை ஆர்.எம்.றிமாஸ், இரண்டாம் இடத்தினை எச்.எம்.சஜி, மூன்றாம் இடத்தினை எம்.ஏ.அஸ்பாக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இல்ல விளையாட்டு இறுதி நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில் இடம்பெறும்.

Latest Offers