வவுனியாவில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா ஏ9 வீதி, கனகராயன்குளம் பகுதியில் கனரக வாகனம் ஒன்று நெல் வெட்டும் இயந்திரத்துடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

குறித்த விபத்து இன்று ஏற்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். நோக்கி ஏ9 வீதியூடாக தேங்காய்கள் ஏற்றி கொண்டு பயணித்த கனரக வாகனத்தை திடீரென நிறுத்த முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டை இழந்து அறுவடை இயந்திரத்துடன் மோதி குடை சாய்ந்துள்ளது.

இதன் போது அறுவடை இயந்திரத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அறுவடை இயந்திரம் முற்றாக சேதமடைந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.