டிக்கோயா, போடைஸ் தோட்ட பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று டிக்கோயா, போடைஸ் தோட்ட பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஹட்டன், டயகம பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு தோட்ட நிர்வாகம் மாதம் ஒன்றுக்கு 25 நாள் தொழில் வழங்கினாலும் இறுதியில் எங்களுக்கு 5000 ரூபா சம்பளம் மாத்திரம் எஞ்சிகிறது.

இம்முறை புதிய கூட்டு ஒப்பந்தம் படி வெறுமனே 20ரூபா மாத்திரம் அதிகரித்துள்ளனர். எங்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை ஆகும்.

ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்ட தொழிற்சங்கங்கள் வெறுமனே 20 ரூபாவிற்கு கூட்டு ஒப்பந்தத்தில் சைச்சாதிட்டு விட்டு மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரங்களை கொண்டு செல்கின்றனர்.

எனவே தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு உரிய முறையில் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தினை மலையக அரசியல்வாதிகள் பெற்று கொடுக்காவிட்டால் எதிர்வரும் தேர்தல் காலங்களில் நல்ல பாடத்தினை புகட்டுவோம் என தெரிவித்துள்ளனர்.

Latest Offers