கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக உத்தியோகத்தர்களுக்கு விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பேராசிரியர் வீ. கனகசிங்கம் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது 40 மில்லியன் ரூபாய் செலவில் எட்டு விடுதிகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் பி கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் பீடாதிபதிகள், துணை தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் , கட்டிட ஒப்பந்தகாரர் கே பிரகாஷ் , பிரதிப்பிரதம செயலாளர் பொறியியல் பிரிவு ஆலோசகர் அழகையா வேல்மாணிக்கம் ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் இவ்விடுதி அமைக்கும் இடத்திற்கு "கெம்பஸ் வில்லேஜ்" என பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.