கஞ்சா தூள் வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, கிண்ணியாவில் 50 கிராம் கஞ்சா தூள் வைத்திருந்த இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்ப்படுத்திய போதே இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிண்ணியாவைச் சேர்ந்த 29, 22 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் 50 கிராம் கஞ்சா தூளை ஆலங்கேணி பகுதியில் வைத்துக்கொண்டு நின்ற போது கிண்ணியா போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Latest Offers