பிரதேச அரசியல்வாதிக்கு 5 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

Report Print Steephen Steephen in சமூகம்

களுத்துறை பிரதேசத்தில் காணி ஒன்றின் ஊடாக வீதி ஒன்றை நிர்மாணிக்க ஒருவரிடம் 30 லட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்த, களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லக்ஷ்மன் வித்தியாபத்திரனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளருக்கு 20 லட்சம் ரூபாவை செலுத்துமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

நான்கு குற்றச்சாட்டுக்களுக்கு தனித்தனியாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, அவற்றை 5 ஆண்டுகளில் கழிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.