நேற்று தமிழ் அரச அதிகாரியின் ஊழல் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டது ஜேவிபி இணையத்தளம்

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலாளர் தொடர்பில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த பிரதேச செயலாளர் தொடர்பான செய்திகளை வெளியிட்டதாக கூறப்படும் ஜேவிபி இணையத்தளம் அப்பிரதேச செயலாளர் செய்த ஊழல் தொடர்பான விடயங்களை வெளியிட்டுள்ளது.

குறித்த ஆதாரங்கள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலகத்தின் முன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

செங்கலடி பிரதேச செயலாளர் நா.வில்வரெத்திணம் அவர்களைப் பற்றி சில இணையத்தளங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தே உத்தியோகத்தர்கள் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கில் தில்லாங்கடி வேலையில் ஈடுபட்ட அரச அதிகாரியின் பல ஆதாரங்கள் அம்பலபடுத்திய இணையத்தளம்