இந்த நிலையில் குறித்த பிரதேச செயலாளர் தொடர்பான செய்திகளை வெளியிட்டதாக கூறப்படும் ஜேவிபி இணையத்தளம் அப்பிரதேச செயலாளர் செய்த ஊழல் தொடர்பான விடயங்களை வெளியிட்டுள்ளது.
குறித்த ஆதாரங்கள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளன.
செங்கலடி பிரதேச செயலாளர் நா.வில்வரெத்திணம் அவர்களைப் பற்றி சில இணையத்தளங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தே உத்தியோகத்தர்கள் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.