கம்பஹா, கந்தானை தொடருந்து நிலையத்திற்கு அருகில் 90.79 கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை பிராந்திய குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இன்று இந்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 மற்றும் 36 வயதான இந்த வெளிநாட்டவர்கள் இஸ்ரேல் மற்றும் இத்தாலி நாடுகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா வீசா அனுமதியில் இலங்கை வந்துள்ள இவர்கள் கொக்கேய்ன் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.