10 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட கொலைச் சந்தேக நபர்

Report Print Manju in சமூகம்

இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் 10 வருடங்களின் பின்னர் 38 வயதான பிரதான சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் கடந்த 2008 ஆம் ஆண்டு புத்தளம் வான் வீதியில் தனது நண்பர்களுடன் இணைந்து 21 வயதுடைய செய்னுலாப்தீன் ரமீஸ் என்ற இளைஞனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ததாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நடைபெற்றபோது சந்தேக நபருக்கு 28 வயது எனவும் சம்பவத்தை அடுத்து, சந்தேக நபர் நாட்டைவிட்டு வெளியேறி சிங்கப்பூர், சவுதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு சென்று தலைமறைவாக இருந்துள்ளதாக புத்தளம் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன தெரிவித்தார்.

இதனையடுத்து, சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து, அளுத்கம, தர்ஹா டவுன் ஆகிய பகுதியில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில், சந்தேக நபர், நேற்று புத்தளம் நகரில் தனியார் வைத்தியசாலைக்கு வருகை தந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞனை படுகொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை புத்தளம் வான் குளத்தில் வீசிவிட்டு சென்றதாக சந்தேக நபர் விசாரணைகளின் போது பொலிஸாரிடம் ௯றியுள்ளார்.

இதனையடுத்து, துப்பாக்கியை தேடும் நோக்கில் சந்தேக நபரை இன்று காலை புத்தளம் வான் குளத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார், கடற்படையினரின் சுழியோடி குழுவினரினரால் சந்தேக நபரால் வீசப்படதாக ௯றப்படும் துப்பாக்கியை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.