யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள்!

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்மராட்சி, சாவகச்சேரி பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கில் தற்போதைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் மகன்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய இந்த சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 4ஆம் திகதி இரவு வேளையில் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தை சேர்ந்த தங்கராசா நிஷான் என்ற 25 வயதான இளைஞனும் 32 வயதான குணசேகரன் ராகு என்ற இளைஞனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் மகன்கள் என தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவர்களை விடுவித்து கொள்வதற்காக இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஊடாக பொலிஸாருக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers