நான் எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை! சி.வி.விக்னேஸ்வரன் விளக்கம்

Report Print Murali Murali in சமூகம்

ஈ.பி.ஆர்.எல்.எவ் மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியதைத் தவிர புத்தக வெளியீட்டிலோ அல்லது வேறு எந்த ஆவண வெளியீட்டிலோ நான் ஈடுபடவில்லை என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மாநாடு கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த சி.வி.விக்னேஸ்வரன் ஆவணம் ஒன்றை வெளியிட்டு வைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக அந்த ஆவணத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த விடயம் குறித்து சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.