மாகந்துரே மதுஷின் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் மீட்பு! மைத்திரி அதிரடி உத்தரவு

Report Print Murali Murali in சமூகம்

துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள கோஷ்டி தலைவர் மாகந்துரே மதுஷின் துபாய் வீட்டில் இருந்து 5 கோடி ரூபா ரொக்கப்பணம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அவருக்கு சொந்தமான மூன்று வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், மாகந்துரே மதுஷின் உதவியாளர்கள் மூவர் போதைப்பொருளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தளையில் இன்று அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்த ஐஸ் உள்ளிட்ட 20 போதைவில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

26, 29, 32 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை விசாரணைகளின் பொருட்டு ​போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இமாகந்துரே மதுஷூடன் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்க அங்கீகாரம் வழங்கியவர்களைக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன், நேற்றும் இன்றும் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார செயலர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோருடன் ஜனாதிபதி விசேட பேச்சு நடத்தியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.