டிப்பர் வாகனமும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - தம்பலகாமம், 95ஆம் கட்டை பகுதியில் டிப்பர் வாகனமொன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன.

இந்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் லொறியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து சீமெந்து ஏற்றி வந்த லொறியும், கந்தளாயில் இருந்து கப்பல்துறை பகுதிக்கு சென்ற டிப்பர் வாகனமுமே விபத்திற்கு இலக்காகியுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.