சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தகவல்

Report Print Yathu in சமூகம்

வடமாகாணத்தில் கடந்த ஆண்டுகளில் ஒப்பிடுகையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச்சேவை திணைக்களத்தின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் கடந்த 2017ஆம் ஆண்டை விட, 2018ஆம்ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக நன்னடத்தை சிறுவர்கள் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் புள்ளி விபரம் மூலம் அறியமுடிகின்றது.

2017ஆம் ஆண்டு 2018ஆம் ஆண்டுகளில் 22 சிறுவர்கள் கடத்தல் சம்பவங்களும், 41 சிறுவர்கள் தற்கொலை முயற்சிகளும், 228 பாலியல் துஸ்பிரயோகங்களும், 134 சிறுவர்கள் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டை விட 2018ஆம் ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்திருப்பதுடன், மன்னார், மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன.

மேற்படி புள்ளி விபரத்தின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 26 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 20 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 12 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 32 சிறுவர்களுமாக மொத்தமாக 105 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை பாலியல் துஸ்பிரயோக முயற்சி மேறகொள்ளப்பட்டதில் யாழ். மாவட்டத்தில் 10 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 05 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 02 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 02 சிறுவர்களுமாக மொத்தம் 47 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடல் ரீதியான முறைகேட்டுக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டத்தில் 11 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தல் 18 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 12 சிறுவர்களும், வவனியா மாவட்டத்தில் 05 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 45 சிறுவர்களும், உள்ளடங்கலாக 91 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள ரீதியான துஸ்யோகத்திற்குட்பட்டு பாதிக்கப்பட்டவர்களில் மன்னார் மாவட்டத்தில் 06 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 07 சிறுவர்களுமாக 19 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 01 சிறுவரும், மன்னார் மாவட்டத்தில் 07 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 01 சிறுவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 19 சிறுவர்களுமாக சுமார் 27 சிறுவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 03 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 02 சிறுவர்களும், கடந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள் என யாழ். மாவட்டத்தில் 9 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில 09 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 04 சிறுவர்களும் ,வவுனியா மாவட்டத்தில் 04 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 29 சிறுவர்களும் உள்ளடங்கலாக 67 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் யாழ்.மாவட்டத்தில் 02 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 04 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 05 சிறுவர்களுமாக 11 சிறுவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டில் கடத்தப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

இவ்வாறு வடக்கு மாகாணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு புள்ளி விபரத்தகவலின் படி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு 123 சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாலியல் துஸ்பிரயோக முயற்சி மேற்கொண்டதில் 38 சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் உடல் ரீதியான முறைகேடுகள் மூலம் 67 சிறுவர்களும், உள ரீதியான துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 39 சிறுவர்களும், தற்கொலை முயற்சிகள் மூலம் 14 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மூன்று சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டதுடன், உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட 67 சிறுவர்களும், 11 சிறுவர்களின் கடத்தல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதனுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டிலே சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக மேற்படி புள்ளி விபரங்களில் அறிய முடிகின்றது.