ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இந்தியர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

இந்தியாவின் மும்பாய் நகரில் இருந்து இலங்கை வந்த இந்திய பிரஜை தனது பயணப் பொதியில் மறைத்து வைத்து கொக்கேய்ன் போதைப் பொருளை கடத்தி வந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 34 வயதான இந்திய பிரஜையின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.05 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றிய கொக்கேய்ன் போதைப் பொருளின் பெறுமதி ஒரு கோடியே 50 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.