கொழும்பில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்! தீவிரம் பெறும் என எச்சரிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு நகரில் சனத்தொகை அடர்த்தி கூடிய இடங்களில் தொழுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை முழுவதிலும் உள்ள தொழுநோயாளர்களது எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதமென கொழும்பு பிரதான சுகாதார வைத்திய உத்தியோகத்தர் டொக்டர் றுவன் விஜயமுனி தெரிவித்தார்.

கொட்டாஞ்சேனை, நாராஹென்பிட்டி, வனாத்தமுல்ல, தெமட்டகொட, கிராண்ட்பாஸ் ஆகிய இடங்களில் தொழு நோயாளர்கள் இனங்காணப்பட்டார்கள்.

சுகாதார அமைச்சு அமுலாக்கும் திட்டங்கள் காரணமாக தொழுநோயாளர்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை வழங்க முடிந்ததாக டொக்டர் விஜயமுனி கூறினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் டொக்டர் விஜயமுனி இந்த தகவல்களை வெளியிட்டார்.