துப்பாக்கியை காட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

துப்பாக்கியை காண்பித்து கொலை செய்ய போவதாக அச்சுறுத்தல் விடுத்த இரண்டு பேரை சீதுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வானில் வந்த சந்தேக நபர்கள், துப்பாக்கியை காண்பித்து வீட்டு உரிமையாளரை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சீதுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கான 19 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பணப் பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 32 மற்றும் 35 வயதான சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

Latest Offers