விசா இன்றி தங்கியிருந்த 9 இந்தியர்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, பொரலந்த பிரதேசத்தில் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசா அனுமதி இருக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

24 முதல் 42 வயதான இந்தியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.