வவுனியாவில் போதைபொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா, ஈரட்டை பரக்கும் மகாவித்தியாலய மாணவர்களால் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஈரட்டை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இவ் விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலையின் அதிபர் தலைமையில் ஆரம்பமானது.

இதன் போது மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியிருந்ததோடு, கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.