தானியங்கி பண பறிமாற்று இயந்திரங்களில் திருட்டு - சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்

Report Print Steephen Steephen in சமூகம்

தானியங்கி பணப்பறிமாற்று இயந்திரங்களின்(ATM) திருட்டுத்தனமாக இலத்திரனியல் கருவியை பொருத்தி, வங்கி வாடிக்கையாளர்களின் வங்கி அட்டைகளின் இரகசிய தகவல்களை திருடும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இரத்மலானை பிரதேசத்தில் ATM இயந்திரம் ஒன்றில் இலத்திரனியல் கருவியை பொருத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளை பயன்படுத்தி போலி வங்கி அட்டையை தயாரித்து வெளிநாடுகளில் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிசிரிவி கெமராவில் பதிவான சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த நபர் பற்றிய தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 011-2422716, 011-2326670 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.