இரண்டு போத்தல் வடிசாராயம் வைத்திருந்த நபருக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, சம்பூர் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி இரண்டு போத்தல் வடிசாராயத்தினை வைத்திருந்த நபரை 5000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்ப்படுத்திய போதே 5000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், அவ்வாறு குறித்த தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் ஒரு மாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சந்தோசபுரம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மதுவுக்கு அடிமையானவர் என்பதோடு அனுமதிப்பத்திரமின்றி இரண்டு போத்தல் வடிசாராயத்தினை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest Offers