துபாயில் ராஜதந்திர கடவுச்சீட்டுடன் பிடிபட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

Report Print Steephen Steephen in சமூகம்

பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் துபாய் நாட்டில் கைது செய்யப்படும் போது அவருடன் இருந்த இலங்கையர்களில் ராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டிருந்தவர், கும்புறுப்பிட்டிய பிரதேச சபையின் உறுப்பினர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிரதேச சபை உறுப்பினருக்கும் தேசிய அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதி ஒருவருக்கும் இருக்கும் உறவு முறை சம்பந்தமாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதுடன் பாதுகாப்பு தரப்பினர் இது சம்பந்தமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

அத்துடன் மதுஷின் விருந்தின் போது கைது செய்யப்பட்ட சிறைச்சாலை அத்தியட்சகரும் கும்புறுப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் களுத்துறை சிறைச்சாலையில் சேவையாற்றிய போது, வாகன விபத்துக்கு உள்ளாகி அங்கவீனமாகி, ஊன்று கோலை பயன்படுத்தி வருபவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகந்துரே மதுஷ் கைது செய்யப்பட்டிருப்பது தென் பகுதி அரசியல்வாதிகள் சிலருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மதுஷின் தந்தையின் இறுதிச்சடங்கில், எதிரணி அரசியல் கட்சியின் ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் செய்தி தளங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.