பாழடைந்த கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய பசு மாடு!

Report Print Theesan in சமூகம்

முல்லைத்தீவில் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணறுக்குள் தவறி வீழ்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பசு மாடு ஒன்று அப்பகுதி இளைஞர்களின் துரித செயற்பாட்டினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, பிரதான சந்திக்கு அண்மையிலுள்ள பகுதியில் இன்று காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடே இவ்வாறு தவறி வீழ்ந்துள்ளது.

வெளியே வருவதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டபோதும் பசுவால் வெளியே வரமுடியாததை அடுத்து அப்பகுதி மக்கள் பிரதேச சபையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும், பிரதேச சபையினர் குறித்த நேரத்திற்கு சமூகமளிக்காததுடன் வேறு பல காரணங்களையும் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் உரிய முறையில் செயற்பட்டு பசு மாட்டினை மீட்டுள்ளதுடன் அதனை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

இளைஞர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பசுவை மீட்டதில் ஒன்றிணைந்து செயற்பாட்டமையால் அப்பகுதி மக்களின் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளனர்.