விடுதலையான மாணவர்கள் அமைச்சர் ரிஷாதை சந்தித்தனர்!

Report Print Ashik in சமூகம்

பாரதுாரமான குற்றத்தை செய்தார்கள் என்று தெரிவித்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் விடுதலைக்காக உதவிய அனைவருக்கும் மாணவர்களும், பெற்றோர்களும், நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

தங்களது விடுதலைக்கு உதவிகளை செய்தமைக்காக அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை அவரது அமைச்சில் நேற்று சந்தித்து தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

விடுதலைக்காக உதவிய அமைச்சருக்கு மாத்திரமன்றி சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சட்டப்பணிப்பாளர் ருஸ்தி ஹபீப் மற்றும் சட்டத்தரணி சப்ராஸ் அபூபக்கர் ஆகியோருக்கும் அவர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவர்களை பார்வையிட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இஷாக் ரஹ்மான் எம் .பி ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.