அனுமதிப்பதிபத்திரம் இன்றி மணல் ஏற்றி சென்ற நபர் கைது

Report Print Theesan in சமூகம்

அனுமதி பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் சம்பவமானது நேற்று வவுனியா மகாறம்பைகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போதே அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றி சென்றமை தெரியவந்துள்ளது.

டிப்பர் வாகனத்தின் சாரதி கைதுசெய்யபட்டதுடன், டிப்பர் வாகனத்தினையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.