மனைவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், சேருவில - சிறிதுவ பகுதியை சேர்ந்த எச்.கே.அபேரத்ன (46 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மனைவியை தாக்கி காயப்படுத்தியதாகவும், மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சேருநுவர பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் பொலிஸார், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான கணவரை கைது செய்துள்ளனர்.

காயங்களுக்குள்ளான மனைவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சந்தேகநபரை இன்று மூதூர் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers