வெளிநாட்டில் சிக்கிய இலங்கையரின் வீட்டில் இராணுவ சீருடைகள், ஆயுதங்கள் மீட்பு

Report Print Vethu Vethu in சமூகம்

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகதுரே மதுஷின் ஆதரவாளரான ஜங்கா என்ற போதைப்பொருள் வர்த்தகரின் வீட்டில் இராணுவ சீருடைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

கந்தர பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் 18 இராணுவ சீருடைகள், டீ 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 26 தோட்டாக்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டுபாயில் கைது செய்யப்பட்ட மாகதுரே மதுஷுடன் ஜங்கா கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை பிரதேச பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இராணுவ சீருடைகளுடன் போதை பொருள் வர்த்தகர் ஜங்கா என்று அழைக்கப்படும் நபரின் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers