நல்லூர் பிரதேசசபையின் நடவடிக்கைக்கு எதிராக வியாபார புறக்கணிப்பு போராட்டம்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேசசபையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருநெல்வேலி சந்தை பகுதியில் வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி பொது சந்தையில் நடைபாதைக்கு இடையூறாக வியாபாரி ஒருவர் நடந்து கொண்டமை தொடர்பில் வியாபார உரிமத்தை தற்காலிகமாக நல்லூர் பிரதேசசபை தடுத்துள்ளமையை கண்டித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வியாபாரி மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அநியாயமானது என்பதுடன், நல்லூர் பிரதேசசபை அடாவடியாக நடந்து கொள்வதாகவும் வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை புறக்கணித்து இன்று காலை தொடக்கம் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.