தமிழர் தலைநகரில் வெளிநாட்டு பிரஜையொருவர் உயிரிழப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

யுக்ரேன் நாட்டை சேர்ந்த பிரதான பொறியியலாளரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 07ஆம் திகதி யுக்ரேன் நாட்டிலிருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த MV-STAR-MONO கப்பலில் வந்த பிரதான பொறியியலாளரான VADYM KYSLOV (43 வயது) என்பவரே உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த போதே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் அவரது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனையின் பின் வெளிநாட்டுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரியவருகிறது.