உப்புவெளியில் 13 பேர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை 04ஆம் கட்டை, 05ஆம் கட்டை, சுமேதகம மற்றும் கிளிகுஞ்சுமலை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் திருகோணமலை உப்புவெளி பொலிஸார் பல சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சுற்றிவளைப்பில் கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 07 பேரையும், கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரையும், ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்களையும் கைது செய்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை இன்றைய தினம் திருகோணமலை பதில் நீதவான் எம்.பீ.அன்பார் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.