2000 ருபாய் லஞ்சம் வாங்கிய பொலிஸ் சார்ஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
வெலிவேரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட்டே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் சார்ஜென்ட் 2000ம் ருபாய் லஞ்சம் கேட்டதாக மேல் மாகாணத்தின் வடபகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடம் நபரொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபரான பொலிஸ் சார்ஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.