புகைப்பரிசோதனை சான்றிதழ் எடுத்து செல்லாத சாரதிக்கு தண்டப்பணம் விதிப்பு

Report Print Mohan Mohan in சமூகம்
165Shares

வாகன புகைக்கசிவு தர நிர்ணயத்திற்கு அமைவானது என உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்படும் சான்றிதலை எடுத்து செல்லாத சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றம் நேற்று 1000 ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாரதி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் புகைப்பரிசோதனைச் சான்றிதழ் எடுத்து செல்லாத சாரதிக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது சான்றிதழை சாரதி காண்பித்ததையடுத்து கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து பொலிஸ் கடமையில் ஈடுபட்டும் பொலிஸார் கடந்த காலங்களில் வாகன வருமான அனுமதிப் பத்திரம், சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் காப்புறுதி அட்டை ஆகியவற்றை மட்டும் பரிசோதித்து வந்த நிலையில் தற்பொழுது வாகன புகைக்கசிவு தரநிர்ணய சான்றிதலையும் பரிசோதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.