மாகந்துரே மதுஷின் மனைவியின் காருடன் இருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்
1398Shares

துபாய் நாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷின் இரண்டாவது மனைவி எனக் கூறப்படும் பெண்ணுக்கு சொந்தமான காருடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று பாதுக்கை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திலானி நிஷாயா திலகரட்ன என்ற இந்த பெண்ணுக்கு சொந்தமான இந்த காரை பாதுக்கை -பொரகொதர பிரதேசத்தில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த காரில் இருந்த இரண்டு பேரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் துபாய் நாட்டில் இருந்து இலங்கை வந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பாதுக்கை பொலிஸ் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திலானி நிஷாயா திலக்கரட்ன என்ற பெண் தற்போது துபாயில் வசித்து வருகிறார். மதுஷ் மற்றும் திலானியின் மகனது பிறந்த நாள் விருந்தில் வைத்தே மதுஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திலானி நிஷாயா திலக்கரட்ன, வெலிகடை சிறைச்சாலை தாக்குதலில் கொல்லப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவரின் மனைவி எனவும் இந்த பெண்ணை மதுஷ், துபாய் நாட்டுக்கு அழைத்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.