மீள்குடியேற்ற கிராமமான மஜ்மா நகரில் யானைகள் அட்டகாசம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மீள் குடியேற்ற கிராமமான மஜ்மா கிராமத்தில் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகளால் அப்பகுதியில் உள்ள வயல்களும், வீட்டுத்தோட்டங்களும் சேதமடைந்துள்ளதாக கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மீள்குடியேற்ற கிராமமான மஜ்மா நகரில் புகுந்த யானைகளால் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களும், தென்னை, மரவள்ளி, வாழை, சோளம் போன்ற வீட்டுத் தோட்ட பயிர்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

வெள்ளாமைச்சேனை காட்டுப்பகுதியில் இருந்து வரும் யானைகள் இவ்வாறு பயிர்களை சேதப்படுத்துவதாகவும் இரவு நேரங்களில் நிம்மதியில்லாமல் அச்சத்திலேயே இருப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதிலும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.