வவுனியாவில் நினைவஞ்சலிக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

Report Print Theesan in சமூகம்
243Shares

வவுனியா, சிதம்பரபுரம் - கற்குளம் பகுதியில் இருந்து நேற்று மாலை தனது பாட்டியுடன் சென்ற சிறுவன் இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிவானந்தம் தருண் என்ற ஆறு வயது சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை சுந்தரபுரத்திலிருந்து சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 3 பகுதிக்கு, தொண்ணூறாம் நாள் நினைவஞ்சலிக்கு முன் ஆயத்த வேலைக்காக குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் சென்றுள்ளார்.

அங்கு ஏனைய சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்ததாகவும் இரவாகியதால் சிறுவனை காணவில்லை என நீண்ட நேரமாக தேடியும் எங்குமே கிடைக்கவில்லை.

இதனையடுத்து இன்று கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட கிணறானது முழுமையாக நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கிணற்றின் கட்டு 3 அடிக்கு உயற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கிணறு என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கிணற்றில் பிள்ளை எவ்வாறு வீழ்ந்திருக்க கூடும். இது கொலையா? அல்லது பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா? போன்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தற்போது சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சிறுவனின் மரணம் முழு கிராமத்தையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.