துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகரின் குருதியில் கொக்கேய்ன் போதைப் பொருள்

Report Print Steephen Steephen in சமூகம்
473Shares

துபாய் நாட்டில் நடந்த விருந்தின் போது மாகந்துரே மதுஷூடன் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா மற்றும் நடிகர் ரயன் வென் ரோயன் ஆகியோரின் இரத்த மாதிரிகளில் விஷப் போதைப் பொருள் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விருந்தில் கைது செய்யப்பட்ட 31 பேரிடம் பெறப்பட்ட இரத்த மாதிரிகளில் கொக்கேய்ன் போதைப் பொருள் அடங்கியிருப்பதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் நாளைய தினம் துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

மாகந்துரே மதுஷூடன் கைது செய்யப்பட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டவர்களின் குருதியில் போதைப் பொருள் அடங்கியிருக்கவில்லை. விடுதலை செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.

இதனிடையே மதுஷ் உட்பட சந்தேக நபர்களை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பான ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துடன் ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சரோஜா சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.