வவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இன்று காலை 8.30 மணிமுதல் நகர் பகுதிகளில் முன்னறிவித்தலின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மின்சார சபையின் இச் செயற்பாடு காரணமாக பல வியாபார நிலையங்களில் வியாபாரம் மந்த கதியில் இடம்பெறுவதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென முன் அறிவித்தல் ஏதும் இன்றி மின்சாரம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும், வவுனியாவில் பல இடங்களில் இவ்வாறாக திடீரென முன்னறிவித்தலின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டு வழங்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நகரத்தினை அண்டிய பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன், இச் செயற்பாட்டினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உரிய அதிகாரிகள் மின்தடை குறித்து முன்னறிவித்தல் விடுத்து மின்துண்டிப்பை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers