வெளிநாட்டில் சிக்கிய கடத்தல்காரர்களுடன் மங்கள சமரவீரவின் சகா! வெளியான அதிர்ச்சித் தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களில் அமைச்சர் மங்கள சமரவீரவின் இணைப்புச் செயலாளரும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாதாள உலக குழுவின் தலைவனும், போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான மாகந்துரே மனுஷ் அவரது குழுவினருடன் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் அமைச்சர் மங்கள சமரவீரவின் இணைப்பு செயலாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் புலனாய்வு பிரிவிற்கு அமைச்சர் மங்கள கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers