வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

Report Print Vethu Vethu in சமூகம்
1255Shares

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு 10 பில்லியன் ரூபா கடன் உதவியினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களில் அதிகரித்துள்ளது.

சொந்தமான வீடுகளை நிர்மாணித்து கொள்வதற்காகவும் தனது வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் தேவை எழுந்துள்ளதாலேயே இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை நாடிச் செல்கின்றனர்.

அவர்களின் எதிர்பார்ப்புக்களை போன்று தேவைகள் நிறைவு செய்யப்படுவதில்லை. அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கென தனியாக கடன் உதவிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கடன் திட்டத்தினூடாக 10 பில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.