நல்லிணக்க விஜயத்தினை மேற்கொண்டுள்ள கிராம மட்ட சமாதான குழுவினர்

Report Print Kumar in சமூகம்

சிங்களம் - தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகங்கள் அந்த மக்கள் மத்தியில் இருக்கும் மக்கள் அமைப்புகளினால் தீர்க்கப்படும் போது இந்த நாட்டில் நீடித்த அமைதியும் சமாதானமும் ஏற்படும் என மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இரத்தினபுரி எகட் ஹரிதாஸிசன் கிராம மட்ட சமாதான குழுவினர் இன்று ஆயர் இல்லத்திற்கு வருகை தந்து கலந்துரையாடியுள்ளனர்.

தெற்கு – கிழக்கு நல்லிணக்க விஜயத்தின் கீழ் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ள இரத்தினபுரி எகட் ஹரிதாஸிசன் கிராம மட்ட சமாதான குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயங்களை மேற்கொண்டு கலந்துரையாடல்களையும் மாவட்டத்தின் நிலமைகளையும் பார்வையிட்டு வருகின்றனர்.

இதன்போது இரு சமூகங்கள் மத்தியில் கலந்துரையாடல்களின் அவசியம் அவற்றினை முன்னெடுக்கும் வழிவகைகள் குறித்து ஆயர் கலந்துரையாடியதுடன் மட்டக்களப்பின் நிலமைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட எகட் ஹரித்தாஸ் அமைப்பின் உறுப்பினர்களும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.