கிண்ணியாவில் இன்று மாலை 7 கிலோ 250 கிராம் டைனமோட் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரியாட்டுமுனை ஜாவா வீதி கிண்ணியா 5 எனும் முகவரியிலே குறித்த வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் அதே இடத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவரிடமிருந்து 50 அடி நீளமான டைனமோட் எரிபொருளுக்குப் பயன்படுத்தப்படும் நூல் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை விசேட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.