400 கிராம் கேரளளா கஞ்சா வைத்திருந்த ஒருவர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 400 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவரை இம்மாதம் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.பி.அன்பார் இன்று உத்தரவிட்டார்.

பாலையூற்று, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற போது பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Latest Offers