பாதிக்கப்பட்ட 260 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Report Print Mohan Mohan in சமூகம்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 260 பாடசாலை மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இன்று கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணியின் ஒழுங்குபடுத்தலில் மாங்குளம் சித்திவிநாயகர் ஆலய வளாகத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்களது நிதி பங்களிப்பில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 130 மாணவர்களுக்கும், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 130 மாணவர்களுக்கும் இன்று கற்றல் உபகணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர், ஊடக பேச்சாளருமான க.அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.