கொழும்பு கொள்ளுப்பிட்டி மெதடிஸ் பாடசாலைக்கு புத்தகங்கள் வழங்கி வைப்பு!

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு கொள்ளுப்பிட்டி மெதடிஸ் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஒருதொகுதி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலுக்கு அமைய, கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் விஷ்ணுகாந்திற்கு ஒதுக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களில் ஒரு தொகுதி புத்தகங்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், அமைச்சர் மனோ கணேசன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் சின்னத்தம்பி பாஸ்கரா, மஞ்சுளா ராஜேந்திரன், M.பாலசுரேஷ்குமார், பாடசாலை அதிபர் S.ஜெயராஜா மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி அமைப்பாளர்கள் செந்தில்குமார், சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Latest Offers