இளம் ஜோடி மீது துப்பாக்கிச்சூடு! இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Murali Murali in சமூகம்
121Shares

தொம்பே, வனலுவாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்குவாதம் மோதலாக மாறியதில் நபர் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரும் தொம்பே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வனலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய திருமணமான ஜோடி ஒன்றுக்கே சம்பவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரைக் கைதுசெய் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.