வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை! ஆளுநர் அதிரடி நடவடிக்கை

Report Print Murali Murali in சமூகம்

வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு குறைகேள் விசாரணைக் குழுவொன்றினை ஸ்தாபிக்க ஆளுநர் சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளார்.

மூன்று பேர் அடங்கிய இந்த விசாரணைக் குழுவில் இரு பெண்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன் அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களினால் முன்மொழியப்பட்டவராகவும் இருப்பார்.

இதேவேளை வட மாகாணத்தின் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாண கல்வியமைச்சுக்கு தமது ஆலோசனைகளையும் சரியான வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்கு 15 பேரடங்கிய மூத்த கல்விமான் சபையொன்றினை ஸ்தாபிப்பதற்கும் ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

இந்த சபைக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers