டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் என்பவரை இலங்கையிடம் ஒப்படைப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய எமிரகத்தில் மேற்கொள்ளப்படும் நீதிமன்ற செயற்பாடுகளில் அந்த நாட்டு சட்டத்திட்டத்திற்ககைமய குற்றவாளியாகவில்லை என்றால் மாத்திரமே அவர் இலங்கை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்.
இதுவரையில் மதுஷ் உட்பட குழுவினருக்கு எதிராக அந்நாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு அவர்களின் இரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன்போது அந்த குழுவினர் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது.
அந்நாட்டு சட்டத்திற்கமைய போதைப்பொருள் பயன்படுத்தல் அல்லது அருகில் வைத்திருத்தல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகின்றது.
அதற்கமைய இலங்கைக்கு அனுப்பாமல் இந்த குழுவினருக்கு டுபாயில் மரண தண்டனை வழங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.