யாழில் சிக்கிய இளைஞனுக்கு விடுதலைப் புலிகள் பாணியில் தண்டனை கொடுத்த மக்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிக்கிய இளைஞர் மக்களினால் கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக கொடிகாமம் வரணி பகுதியில் இடம்பெற்ற களவு மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் நேற்றையதினம் இளைஞர்களிடம் சிக்கியுள்ளார். இதன்போது அவர் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனிற்கு விடுதலைப்புலிகளின் பாணியில் தண்டனை கொடுக்கப்பட்டதுடன், இளைஞரின் கழுத்தில் வாசகங்கள் எழுதப்பட்ட மட்டையொன்றையும் தொங்கவிட்டு, வீதியில் இழுத்து செல்லப்பட்டார். பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.