வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இரண்டு பெண்கள் அடங்கலாக ஐந்து பேர் விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் புகையிலை தொகை ஒன்றை கொண்டு வந்த வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட புகையிலையின் பெறுமதி 31 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

டுபாய் மற்றும் சார்ஜா ஆகிய நகரங்களிலிருந்து இலங்கை வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு 20 - 35 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு 150000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரச உடமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers